personal blog

ஈழத்து இலக்கிய சிற்றிதழ்கள் – புதியசொல் – காற்றுவெளி

“புதிய சொல் – ஈழத்து இலக்கிய சிற்றிதழ்” – காற்றுவெளி இணையஇதழில் வெளியான எனது கட்டுரை. ஈழத்து சிற்றிதழ்களின் சமகால போக்கு பற்றியும் சமீபத்திய புதிய சொல் பற்றியும் லண்டனில் இருந்து வெளிவருகின்ற காற்றுவெளி இணைய இதழில் எனது கட்டுரை பிரசுரமாகியிருக்கிறது. ஈழத்து இலக்கிய சிற்றிதழ்கள் முயற்சியில் புதிய சொல்லை முக்கிய படைப்பாகக் கருதுகின்றேன். காலாண்டு இதழாக வெளிவருகின்ற புதிய சொல் இதுவரை தனது ஆறு இதழ்களை வெளிக்கொண்டுவந்திருக்கின்றது. ஆறாவது…

Continue Reading

“ நான் வாசித்த நாவல்கள் “ – எஸ்.ரா – சிறுகுறிப்பு

பொதுவானவை - July 28, 2017

எஸ்.ராமகிருஷ்ணன் ஆற்றிய மிகவும் முக்கியமான பல இலக்கிய உரைகள் இருக்கின்றன. எஸ்.ரா ஒரு எழுத்தாளர் என்பதைத் தாண்டி முக்கியமான பேச்சாளரும் கூட. அவர் ஆற்றிய உலக இலக்கியங்கள் தொடர்பான உரைகள் பிரசித்திபெற்றவை. கிரேக்க நாடகங்களை பற்றி கிரேக்க நாடக புத்தக விழா ஒன்றில் பேசியபோது, அவரின் பரந்த அறிவை வியந்திருக்கிறேன். அப்படியான சிறந்த உரையொன்றை சமீபத்தில் புத்தக திருவிழாவின் போது ஆற்றியுள்ளார். “ நான் வாசித்த நாவல்கள் “ என்பதே…

Continue Reading

உலக இலக்கியத் தொடர் 3 – கரமசோவ் சகோதரர்கள் – The Brothers Karamazov-அறிதலும் புரிதலும்.

எமது இலக்கியங்களுக்கும் ருச்சியன் இலக்கியங்களும் மிக நுண்ணிய தொடர்புகள் இருக்கின்றன. உண்மையில் எமது இலக்கியங்கள் என்று மட்டும் நின்றுவிடாமல் உலகின் ஒவ்வொரு தனிமனிதனின் இலக்கியங்களுக்கும் தொடர்பு இருக்கின்றது. ருச்சியர்களின் மொழி கலாசாரம் பண்பாடு வாழ்க்கை முறைகள் எல்லாம் வேறு வேறானவை. அவர்களின் பௌதீக அமைவிடம் சுற்றுச் சூழல் என்று அனைத்துமே வித்தியாசமானவை. இருந்தும் ருச்சியர்களின் இலக்கியம் எமக்கு நுணுக்கமாக இருப்பதற்கு முக்கியமான காரணம் அவை மானுடம் என்ற கருப்பொருளின் இயலாமையும்…

Continue Reading

பேரூந்து – மெடூசா – குறியீடு

பத்திகள் - July 21, 2017

(01)   காலையில் அந்தரப்பட்டு என்னைத் தயார் செய்து கொண்டு அப்பாவுடன் பேரூந்து நிலையத்திற்கு யாழ்பாணம் போவதற்காக சென்றேன். பேரூந்து நிலையம் போவதற்கு முதலே பேரூந்தை இடையில் மறித்து ஏறிக்கொண்டேன். ஏறும் கணமே நடத்துனரும் பேரூந்து படியில் நின்றவரும் ஏதோ பேசிக்கொண்டனர். நான் அதைப் பொருட்படுத்திகொள்ளாமல் என் பாட்டில் ஏறினேன். படியில் நின்ற இருபத்தைந்து மதிக்கத்தக்கவர் என்னை இறுதி ஆசனத்தில் அமரச் சொன்னார். ஏற்கனவே அதில் ஐந்து பேர் உறங்கியும்…

Continue Reading

புதிய சொல். – ஈழத்து இலக்கிய சிற்றிதழ்.

ஈழத்து இலக்கிய சிற்றிதழ்கள் முயற்சியில் புதிய சொல்லை முக்கிய படைப்பாகக் கருதுகின்றேன். காலாண்டு இதழாக வெளிவருகின்ற புதிய சொல் இதுவரை தனது ஆறு இதழ்களை வெளிக்கொண்டுவந்திருக்கின்றது. ஆறாவது இதழ் இந்தவருடம் ஜூலை மாதம் வெளிவந்திருக்கின்றது. இந்த இதழ் ஏப்ரல் – ஜூலை காலாண்டிதழ்.   சமகால இலக்கிய சூழல் என்கிற வரையறைக்குள் இருக்கின்ற சமூகத்தின் இயக்கம் பற்றிய கடுமையான விமர்சனங்கள் எனக்கு இருக்கின்றது. சமகால ஈழத்து எழுத்தாளர்களின் செயற்திறன் எல்லை…

Continue Reading

பெண்ணியம் – கருத்து நிலை விளக்கம்.

சமூகத்தின் கட்டமைப்பில் இருக்கின்ற அடிப்படை அத்துமீறல்கள் காரணமாக ஏற்படுகின்ற கருத்துருவாக்கங்கள் ஒவ்வொரு காலகட்டத்திலும் செறிந்த தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இந்த கருத்துருவாக்கங்கள் அக்கால கட்டத்தின் சமூக நிலைமையையும் மக்களின் எண்ணப் பரவலாக்கத்தையும் காட்டும். ஒரு வலிமையான கருத்து எழுந்த போது ஆதரவுகளும் வளர்ச்சியும் பரவலாக்கமும் மாறுதல்களும் எதிர்ப்பும் மிகச் சாதாரணமாக எழுந்துவிடுகின்றன. சில கருத்தியல்கள் காலம் காலமாக கடத்தப்பட்டும் வந்துகொண்டிருக்கின்றன. ஒரு கருத்தின் நீண்டநாள் இருப்பு இரண்டு விடயங்களை வெளிப்படையாக சுட்டும்.…

Continue Reading

எனக்குப் பிடித்த சிறுகதைகள் 02 – ஆண்கள் படித்துறை – ஜே.பி. சாணக்யா

எஸ். ராமகிருஷ்ணன் தெரிவு செய்த சிறந்த 100 சிறுகதைகளில் இதுவும் ஒன்று. அவரது தொகுப்பில் அதாவது மேல் வருகின்ற PDF இல் 303 இலிருந்து  316 வரையான பக்கங்களில் ஆண்கள் படித்துறை கதை இருக்கின்றது. எஸ். ராமகிருஷ்ணன் தெரிவு செய்த சிறந்த 100 சிறுகதைகள் தொகுப்பு – பாகம் 01   இரண்டாம் பாகத்திற்கு   இரண்டாம் பாகம்.   புகைப்பட உதவி Shurti.tv

Continue Reading

அறையைப் பற்றி எழுதுதல்.

கவிதைகள் - July 3, 2017

எல்லோரும் அவர்களின் அறையைப் பற்றி எழுதிக்கொண்டே இருக்கிறார்கள். அப்படி என்னதான் இருக்கிறது அறைக்குள்? நான் காணாத எவற்றையெல்லாம் அது வைத்திருக்கிறது? ஒரு நாளில் சராசரியாக பத்து மணித்தியாலங்கள் அதற்குள் தூங்குகிறேன் ; இரண்டு மணித்தியாலங்கள் அதற்குள் தூங்குவது போன்று புரள்கின்றேன். அத்தனை நேர சொப்பனத்திலும் காணாத ஒன்றை, மிகுதி நேர விழிப்பிலும் காணாத ஒன்றை, அப்படி என்னதான் இருக்கிறது அறைக்குள்? வலிந்து நின்று தவிர்த்தாலும் அறை மட்டும் லாவகமாக புகுந்து…

Continue Reading

எனக்குப் பிடித்த சிறுகதைகள் 01 – கடவுளுக்குக் கடிதம் – சுஜாதா

கடவுளுக்குக் கடிதம் – சுஜாதா

Continue Reading

வாசிப்பும் பகிர்வும்.

நமது வாசிப்பு அனுபவத்தில் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு வாசிப்பு வேட்கை இருக்கும். நாம் நாளாந்தம் நெருக்கமான உணர்வுகளைச் சீண்டிவிடுகின்ற வாசிப்பியையும் கடந்துபோகின்றோம். வாசித்தவுடன் தொடர்பற்றுப்போகின்ற வாசிப்பையும் கடந்து தான் போகின்றோம். இதை எந்நிலை வாசிப்பு அனுபவம் கொண்டவராலும் தவிர்க்கமுடியாது. நாம் தேர்ந்தெடுத்து வாசிக்கின்றோம் என்றாலும் அதில் பல அணுக்கமாகவும் அதே அளவு பல அந்நியமாகவும் இருந்துவிடுகின்றன. அதே நேரம் தேர்ந்தெடுகின்றவற்றிற்கு அப்பால் பல நல்ல படைப்புகளை தவறவிடுகின்றோம். இது சூழ்நிலை…

Continue Reading